- இல்லாளகத்திருக்க இல்லாததொன்றில்லை
வழிகாட்டும் ஜோதிடம்!
மனிதனுக்கு வாழ்வில் வழிகாட்டியாக எப்போதும் நான்கு பேர் உள்ளார்கள். அவர்கள் யார் தெரியுமா? மாதா பிதா குரு தெய்வம். இளமை முதல் உலக அனுபவம் பெறும்வரை அவனுக்கு வழிகாட்டியாக விளங்குவது மாதாவும் பிதாவும். கலைகளைபப்ற்றியும், தன்னை பற்றியும், இறைவனை பற்றியும் அறிந்து கொள்ள, மனிதனுக்கு ஒரு குரு தேவைப் படுகிறது. மனிதனுக்கு வழிகாட்டும் வேலையை செய்வது எது? கண். அதனால்தான் ஜோதிடமும் வேத புருஷனின் கண்ணாக விளங்குகின்றது. ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில், காலை எழுந்தது முதல் இரவு உறங்கப் போகும் வரை, மனிதன் பலவகையான அனுபவங்களைப் பெறுகிறான். மேலும் தான் பாடுபட்டு ஈட்டிய பணத்தையும் பலவற்றிற்கும் செலவு செய்கிறான். தான் ஈடுபடும் செயல் நல்லபடியாக முடிவதற்கும், அதன் மூலம் அதிகம் லாபம் பெற வேண்டும் என மனிதன் விரும்புவது இயற்கையே!.
இதற்கு ஜோதிடம் கை கொடுக்கிறது.
ஒரு செயலில் இறங்குமுன் இன்றைய நாள் எப்படி, நட்சத்திரம் என்ன? ராகு, காலம், எம கண்டம், சுப ஹோரைகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு செயல்படும் போது மனிதனுக்கு நல் வழியும், நிம்மதியும் கிடைக்கிறது.ஆண்டவன் படைப்பில் உயர்ந்தவனாக, சிறந்தவனாக விளங்குபவன் மனிதன். பிறப்பு முதல், எண்பதாம் திருமணம் வரை மனித வாழ்வில் பல மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவையெல்லாம் நல்ல விதமாக நடை பெற்றால், மனித குலம் வாழையடி வாழையாக வளர்ந்து தழைத்தோங்கும். இதற்குத் தேவையான செய்திகளையும், அவன் கடைபிடிக்க வேண்டிய முறைகள் பற்றியும் ஜோதிடம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. எப்போது நகைகள் வாங்க வேண்டும்? எப்போது பொன்னாபரணம் பூணலாம்? புது வாகனங்கள் ஓட்ட ஏற்ற நேரம், பயிர்கள் வைப்பதற்கும், விளைந்த பயிரை சேமித்து வைப்பதற்கும் கூட ஜோதிடம் நமக்கு உதவியாக இருக்கிறது.
பொதுவாக மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறான். நோய்வாய்ப்படும் சமயம், மனிதன் எப்போது மருந்துண்ண வேண்டும், நோய் நீங்கிய பின் எப்போது குளிக்க வேண்டும் ஆகியவற்றைப் பற்றி தேவையான செய்திகளையும் கூட களஞ்சியமாக விளங்கும் ஜோதிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம். சுருங்கச் சொன்னால் மனிதன் பிறப்பது முதற்கொண்டு, அவன் வாழ்வில் பல கட்டங்களிலும் ஜோதிடம் மனிதனுக்கு வழிகாட்டியாய் விளங்கிக் கொண்டு வந்துள்ளது, விளங்குகிறது, இனியும் விளங்கும்!
ஜோதிடர். திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்.
Astrological predictions, Horoscope casting and matching for matrimony, NEWS and articles on Astrology

