Astrotimers.com
MATRIMONIAL AND ASTROLOGICAL SERVICES
Free Matrimonial Service for All Communities
இல்லறமே நல்லறம்
இருமனம் இணைந்தாலே திருமணம்

ஜாதகப் பொருத்தம் - Horoscope Matching

பொருத்தம்!

நாம் பலவற்றிற்கும் பயன்படுத்தும் வார்த்தை.

ஆடை அணிகலன்களைத் தேர்வு செய்வது முதல், இல்லத்திற்கு வர்ணம் பூசும் வேலை வரை அனைத்திலும் பொருத்தம் தானா, இது நமக்கு ஏற்றதுதானா என்று பார்த்து செய்கிறோம். அதனால்தான், மனிதன் வாழ்வில் திருப்பத்தை உண்டாக்கும், அவனை தர்ம நெறிக்கு அழைத்துச் செல்லும் திருமணம் என்று வருகையில், ஜாதகப் பொருத்தம் என்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகிறது.

ஏன் ஜாதகங்கள் பார்க்கப்பட வேண்டும்? நல்ல கேள்வி. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மை பாதிக்கின்றன. சீதோஷ்ண நிலை, பருவ கால மாறுதல்கள் ஆகியவற்றால், மனிதனின் வாழ்வில் மாறுதல்கள் ஏற்படுவது போல், கிரகங்களின் அசைவினாலும், மனிதனின் வாழ்வில் மாற்றங்கள் பல ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம் கண்டு பிடிக்க நமக்கு உதவுவது ஜாதகம். ஒரு குழந்தை பிறக்கும் போது, இருக்கின்ற கிரக நிலைகளின் பதிவே ஜாதகம். இதிலிருந்து அவர்களின் இயல்பு, குணாதிசயம், சம்பாத்தியம், குழந்தை செல்வம், வாழ்க்கை அமையும் முறை, அனுபவிக்கும் பாக்கியம் ஆகியவை எப்படி இருக்கின்றன என்று அறிந்து கொள்ளலாம்.

சதாரண ஆடைக்கே, பூக்கள், நிறம், துணியின் தன்மை ஆகியவை நமக்கு உகந்ததாக இருக்கின்றனவா, பொருத்தமாக இருக்கின்றனவா என்று தேர்வு செய்யும் நாம், வாழ்க்கை முழுவதும் நம்முடன் இருக்கப் போகும் துணை நமக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று நினைப்பதும், விரும்புவதும் இயற்கைதானே? இதற்கு வழிகாட்டியாகவே நம் முன்னோர்கள் பொருத்த சந்திரிகை என்ற ஒன்றை நமக்குத் தந்துள்ளார்கள். இதில் தினம், கணம் என்று பல விஷயங்கள் உள்ளன.

இவையெல்லாம் எதைக் குறிக்கின்றன என்பது பற்றி இனி வரும் கட்டுரைகளில் காண்போம். astrotimers.com தளத்தில், மனிதனின் அன்றாட வாழ்வோடு தொடர்புடைய ஜோதிடக் குறிப்புகள், ஜாதகம் கணித்தல், பலன்கள், திருமணப் பொருத்தம், குழந்தை பாக்கியம், தொழில் மற்றும் ஜோதிடம் தொடர்பான இதர விளக்கங்கள் ஆகியவை அளிக்கப்படும்.

இவற்றை சரியாக அறிந்து கொள்வதற்குக் கீழ்க்கண்ட விவரங்கள் தேவை:

பெயர், பிறந்த வருடம், மாதம், தேதி மற்றும் ஊர் (பிறந்த ஊர் சிற்றூர் அல்லது கிராமமாயின் அருகில் உள்ள 2 பெரிய நகரங்களின் பெயர்) பிறந்த நேரம்.

திருமணப் பொருத்தம் மூலம் நல்ல மண வாழ்க்கை அமைய நவக்கிரகங்கள் நல் அருள் புரிவார்களாக!

ஜோதிடர். திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன். ஜோதிடர். திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்.

KNOW ABOUT ASTRO-GAYATHRI

SERVICES OF ASTRO-GAYATHRI


Astrological predictions, Horoscope casting and matching for matrimony, NEWS and articles on Astrology

Designed and maintained by AKR Consultants