Astrotimers.com
MATRIMONIAL AND ASTROLOGICAL SERVICES
Free Matrimonial Service for All Communities
இல்லறமே நல்லறம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

அள்ளித்தரும் அக்ஷய திருதியை!

வைகாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாள் வரும் அக்ஷய திருதியை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அக்ஷய என்றால் குறைவில்லாதது என்று பொருள். மனிதன் குறைவில்லாத அருளையும், பொருளையும் பெறவே விரும்புவான். இந்த இரண்டையும் ஒரு சேர அளிப்பது அக்ஷய திருதியை ஆகும்.

வடநாட்டில், பல ஊர்களில் அக்ஷய திரிதியை அன்று திருமணங்கள் நடைபெறுகின்றன. அன்றே விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் பிறந்தநாளும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. திரேதாயுகம் ஆரம்பித்த நாளும் அக்ஷய திருதியை அன்றுதான் என்று புராணங்கள் கூறுகின்றன. அத்துடன் அன்று மேற்கொள்ளும் விரதமும், லக்ஷ்மி குபேர வழிபாடும் சிறப்பான பலன்களைத் தருகின்றன.

அருள் வளம் வேண்டும் மனிதன் அன்னை லக்ஷ்மியை வழிபடுகிறான், ஏனனில் மனித வாழ்வில் பல செயல்கள் செவ்வனே நடைபெறுவதற்குப் பொருள் வளம் தேவைப்படுகிறது. அதனாலேயே "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற பழமொழி வழக்கில் வந்தது. அப்படிப்பட்ட பொருட் செல்வங்களை தடையின்றிப் பெற, அக்ஷய திருதியை அன்று ஏதேனும் ஒரு பொருளை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல், சேமித்தல், நம் முன்னேற்றத்திற்கு உகந்த காரியங்களை ஆரம்பித்தல் என்ற பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.

எனவே அக்ஷய திருதியை அன்று நமக்கு வேண்டிய ஏதேனும் ஒரு பொருள் பெரியதோ சிறியதோ வாங்கி மகிழ்வோம். மனித மனம் பணத்தினால் நிறைவு பெறுவதில்லை. எவ்வளவுதான் பொருள் இருந்தாலும், அருள் செல்வத்தையும் மனிதன் தேடுகிறான். அந்த அருள் செல்வத்தையும் அக்ஷய திருதியை அன்றே பெற முடியும் என்பதுதான் தனிச் சிறப்பு.

இறைவனை வழிபடுவதோடு அன்று மனிதன் செய்யும் தானங்கள், அளப்பரிய புண்ணியத்தைத் தரும். குடை, விசிறி, எழுது கோல், தண்ணீர் பாத்திரம், வஸ்திரம், பசு மற்றும் மனித குலத்திற்கு உணவு அளித்தல் இப்படிப் பல தானங்களை செய்யலாம். அக்ஷய திருதியை நன்னாளில், நம்மால் இயன்ற வரை தான தர்மங்கள் செய்து நமது வளங்களைப் பெருக்கிக் கொள்வோம்!

ஜோதிடர். திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்.

KNOW ABOUT ASTRO-GAYATHRI

SERVICES OF ASTRO-GAYATHRI


Astrological predictions, Horoscope casting and matching for matrimony, NEWS and articles on Astrology

Designed and maintained by AKR Consultants