- ஜோதிட ஜாதக பரிவர்த்தனை சேவை
Astro Gayathri - Astrologer & Editor
என்னைப்பற்றி:
ஜோதிடப் பாரம்பரியம்: என் தகப்பனாரும் குருவும் ஆகிய அமரர் ஜோதிடக் கடல் திரு எஸ். வைத்யநாதன் அவர்களின் வழி காட்டுதலே என்னை ஜோதிடத் துறைக்கு கொண்டு வந்தது. ஜோதிடத்திலும், சமஸ்கிருதத்திலும் வல்லமை பெற்று, காஞ்சி மகாமுனிவரின் சமஸ்கிருத குருவாகத்திகழ்ந்த தண்டாங்கோரை திரு. சுப்பையா தீக்ஷதர் அவர்களின் வம்சாவழி வந்தவர் என் தகப்பனார் ஆவார்.
1994 முதல் ஜோதிடத்தில் இருந்த நாட்டம், பன்னிரண்டு ஆண்டு காலம், என் தகப்பனாரின் வழிகாட்டுதலோடு பட்டை தீட்டப்பெற்று, என் முதல் படைப்பாக பாண்டிச்சேரி அட்சயா 2006-2007-ம் ஆண்டு திருக்கணித பஞ்சாங்கம் மலர்ந்தது. பாண்டிச்சேரி அட்சயா அளித்த திருக்கணித மேதை என்ற பட்டமும் என்னுடன் இணைந்து கொண்டது. என்னுடைய 2006-07 குருப்பெயர்ச்சி மற்றும் 2007-ம் ஆண்டுக்கான 12 ராசிகளுக்கான ஆங்கில புத்தாண்டுப்பலன்கள் சென்னை கிரி டிரேடிங்க் ஏஜென்ஸி அவர்கள் மூலம் வெளியிட்டப்பட்டது.
என் 2008க்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களும் ஜோதிட அரசில் வெளி வந்தது. இலங்கையிலிருந்து வெளிவந்து கொன்டிருக்கும் வீர கேசரி என்ற பத்திரிக்கை ஆரம்பித்த சோதிடக் கேசரி என்னும் மாத ஜோதிடப் பத்திரிக்கையின் பிரதான சோதிடராகப் 13 மாதங்கள் பணியாற்றும் அனுபவத்தையும் பெற்றேன். அவ்வப்போது மூலிகை மணி மற்றும் ஜோதிட அரசு பத்திரிக்கைகளில் என்னுடைய ஜோதிடக் கட்டுரைகள் பல வெளி வந்துள்ளன. தற்பொழுது ஜோதிட அரசில், மாதாந்திர ராசிபலன்களை எழுதிக் கொண்டுள்ளேன். நிலாச்சாரல்.காம், இணைய தளத்திலும் அவ்வப்போது ஜோதிடக் கேள்விக்கான பதில்களையும் அளித்துக் கொண்டு வருகிறேன்.
கல்வித்தகுதி:
இளங்கலை தாவரவியல் மற்றும் முதுகலை பட்டயப்படிப்பு, இதழியல் துறை. திருவாவடு துறை ஆதினம் அவர்கள் நடத்திய சைவ சித்தாந்த முதலான்டு வகுப்பில் தேர்வு பெற்று சித்தாந்த நன்மணி பட்டம் பெற்றுள்ளேன்.
astrogayathri
திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்,B.Sc. P.G.Dip. in journalism,
ஜோதிடர்,
எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச் சேரி-605004.
செல்:(0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrotimers@gmail.com
Astrological predictions, Horoscope casting and matching for matrimony, NEWS and articles on Astrology






