astrotimers@gmail.com



0413-2202077   (0)99432-22022 or (0)98946-66048 or (0)94875-62022
விரோதி ஆண்டு
ஆனி மாத பலன்கள்
ஜூன் 15 முதல் ஜூலை 16 வரை


Astro Gayathri     ஜோதிட காயத்ரி

மேஷ ராசி: (அசுவினி 1,2,3,4 பாதங்கள், பரணி 1,2,3,4 பாதங்கள், கார்த்திகை 1-ம் பாதம்)
(பெயரின் முதல் எழுத்து க-சே-சோ-ல-லி-லு-லே-லோ-அ உடையவர்களுக்கும்)

திறமையின் அடிப்படையில் புகழ் பெற விரும்பும் மேஷ ராசி நேயர்களே!

இந்த மாதம் 3-ல் பயணம்செய்யும் சூரியன், 1,2 வீடுகளில் நிற்கும் சுக்ரன், 11-ல் உலா வரும் குரு ஆகிய மூவரும் நற்பலன்களை தர இருக்கிறார்கள். சுக்ரனால் நவீன கலைப் பொருட்கள் விற்பவர்களுக்கு நல்ல வருமானமிருப்பதோடு, புகழும் வந்து சேரும். ஆனி 16 வரை 2-ல் இருந்து கொண்டு சில உறவுகளின் நிறத்தை மாற்றும் புதன், ஆனி 17 முதல் சூரியனோடு பயணம் செய்வதால், திட்டமிட்டப்படி பணிகள் நிறை வேற, நண்ப ர்கள் கை கொடுப்பார்கள்.மாணவர்கள் வெளி நாடுகளில் படிக்கச் செல்லும் வாய்ப்பு குருவின் தயவால் கிட்டும். ஸ்திர சொத்துக்களை சேர்க்கும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.செவ்வாய் 1,2 வீடுகளைக் கடந்து போவதால், சிலரின் விமர்சனங்களால் உங்களின் மன அமைதிக்கு பங்கம் நேரலாம். 4-ல் கேது. வேலை செய்யும் இடங்களில் வேண்டாத விஷயங்களை ஒதுக்கி வைத்து, பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சனி 5-ல். விடுப்பட்டிருந்த குல தெய்வப் பிரார்த்தனையை முடித்து விட் டால், பல தடைகள்நீங்கி மகிழ்ச்சி பெருகும். 10-ல் ராகு. ஒப்பந்தக்காரர் களும், சுய தொழில் புரிபவர்களும், தம்முடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட் டால், மற்றவரின் அதிருப்திக்கு ஆளாகும் நிலை இராது. இந்த மாதம் மேஷ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சந்திராஷ்டம நாட்கள்: 03.07.09 பகல் மணி 11.20 முதல் 05.07.09 இரவு 09.26 மணி வரை.

ரிஷப ராசி: (கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி 1,2,3,4 பாதங்கள், மிருகசீர்ஷம் 1,2 பாதங்கள்)
(பெயரின் முதல் எழுத்து இ-உ-ஏ-ஒ-வ-வி-வு-வே-வோ உடையவர்களுக்கும்)

பிள்ளைக்குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே!

கைக்கு எட்டாமல் விலகிச் சென்ற வாய்ப்புக்களை 3-ம் இட கேது உங்கள் வசமாக்கு வார். 12, 1 வீடுகளில் சுக்ரன் தங்குவதால், கேளிக்கை, பொழுது போக்கு என்று மகிழும் தருணம் பல கிட்டும். சூரியன் 2-ல்.மாணவர்கள் சிந்தும் சுடு சொற்களைக் குறைத்துக் கொள்ளுங்கள். நிறைய நன்மைகள் உங்கள் பக்கம் வந்து சேரும். ஆனி 30 வரை புதன் 1,2,3 வீடுகளில் இருப்பதால், பத்திரம் எழுதுபவர்கள், தட்டச்சு செய்பவர்கள் பரபரப்புடன் வேலை செய்தாலும், போட்டிக்கு நடுவே பயணம் செய்யும் நிலை இருக்கும். சனி 4-ல். அங்கும், இங்கும் சுற்றித்திரியும் நிலைதான் வியா பாரிகளுக்கு. செவ்வாய் 12,1 வீடுகளில். வேண்டாத விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவதைத் தவிர்த்து விடவும். எவரை நம்பியும் உங்கள் வாகனம், அலுவலக சாவி ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டாம். ராகு 9-ல் . வீட்டு மனை தொடர்பான வழக்குக ளில் உங்கள் நேரடி கவனம் தேவை. 10-ல் குரு. பங்குத்துறையில் உள்ளவர்கள் அள வான முதலீடு என்பதில் உறுதியாக இருந்தால் லாபம் என்பது எதிர்பார்த்த அளவு இருக்கும். வெளியூர்ப் பயணங்களில் அதிக காரமானவற்றைத் தவிர்த்தால், ஆரோக் கியத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். இந்த மாதம் ரிஷப ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சந்திராஷ்டம நாட்கள்: 05.07.09 இரவு 09.26 மணி முதல் 08.07.09 காலை 09.00 மணி வரை.

மிதுனராசி: (மிருகசீர்ஷம் 3,4 பாதங்கள், திருவாதிரை 1,2,3,4 பாதங்கள், புனர்பூசம் 1,2,3 பாதங்கள்)
(பெயரின் முதல் எழுத்து கா,கி, கு,க, ஞ,ச, கே,கோ ஹ உடையவர்களுக்கும்)

நேர்மையாய் நடப்பதில் பெருமை கொள்ளும் மிதுன ராசி நேயர்களே!

3-ல் உள்ள சனியால், பகைவர்களின் கொட்டம் குறையும். குடும்ப உறவுகளில் இனிமை கூடும்.9-ல் உள்ள குரு, வியாபாரிகளுக்கு வெளியூர்ப் பயணம் மூலம் வரும் லாபத்தை இரட்டிப்பாக்குவார். 11,12 வீடுகளில் வலம் வரும் சுக்ரனுடன் ஆனி 15 வரை புதனும், ஆனி 18 வரை செவ்வாயும் 11-ம் இடத்தில் உள்ளதால், கலைஞர் களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு வரும். பெண்கள் விரும்பிய ஆபரண வகைகளை வாங்கி மகிழ்வர். பிறகு செவ்வாயும், புதனும் 12-ம் வீடு போகிறார்கள். நீங்கள் அமைதியாய் இருந்தாலும் கூட பிறர் உங்கள் நிம்மதியைக் குலைக்க முயற்சி செய்வார்கள். 30 முதல் புதன் இடம்தான் மாறுகிறார். பலன்கள் திருப்திகரமாய் இராது. கேது 2-ல்.தீயோர் சேர்க்கையை ஒதுக்கிவிட்டால், மாணவர்களுக்கு கல்வியில் எந்த இடைஞ்சலும் இராது. 8-ல் ராகு. வேலையில் இருக் கும் பெண்கள் உணவு, உரையாடல் இரண்டிலும் அளவோடு இருந்தால், வேலையில் கவனம் செலுத்த இயலும். உடல் உள்ளம் இரண்டும் சீராக இருக்கும். சூரியன், 1-ல் . வெளி இடங்களில் தங்கியிருப்பவர்கள் தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருப்பது நலம். இந்த மாதம் மிதுன ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சந்திராஷ்டம நாட்கள்: 08.07.09 காலை 09.00 மணி முதல் 10-07-09 இரவு 08.25 மணி வரை.

கடக ராசி: (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம் 1,2,3, 4 பாதங்கள், ஆயில்யம் 1,2,3, 4 பாதங்கள்)
(பெயரின் முதல் எழுத்து ஹி- ஹீ-ஹே-ஹோ-ட-டி-டு-டே-டோ ஆகியவற்றை முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும்)

பிறர் துன்பத்தைத் துடைக்க போராடும் கடக ராசி நேயர்களே!

இந்த மாதம் செவ்வாயும், சுக்ரனும் 10,11 வீடுகளில் உள்ளதால், கடன் தொல்லை கணிசமாய் குறையும். எனினும் கடன் அட்டைகளின் பயன்பாட்டைத் தவிர்த்து செயல்பட, மனக்கிலேசம் இல்லாமல் வளைய வரலாம். வேலை தேடிக் கொண்டிருந்த வர்கள் நல்ல வேலையில் அமர்வார்கள். புதன் 11,12.1 வீடுகளைத் தொட்டுப் போவதால்,கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்பவர்கள் தங்களை நாடி வரும் சலுகைகளை முறையாகப் பயன்படுத்தவதில் கவனமாய் இருப்பது நல்லது. கேது உங்கள் ராசியில். பொது இடங்களில் பக்குவமாக நடந்து கொள்ளும் கலைஞர்களுக்கு வீண் தொல்லை தோன்றாமலிருக்கும். சனி 2-ல். வழக்கு விவகாரங்களில் எதிராளியின் போக்கைக் கவனித்து செயல்படவும்.7-ம் இட ராகு வியாபாரிகளுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் சில நெருக்கடிகளை உருவாக்கலாம். குரு 8-ல். மாணவர்கள் ஆசிரியர்களிடம் மரியாதையாக நடந்து கொண்டால் அவர்களின் ஆசியோடு,நல்ல வழி காட்டுதலும் கிட்டும்.சாதகமாக முடியும்.சூரியன் 12-ல். பிறர்க்கு ஜாமீன் கையெழு த்துப் போடுவதைத் தவிர்த்து விட்டால், பிரச்னைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த மாதம் கடக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சந்திராஷ்டம நாட்கள்: 10-07-09 இரவு 08.25 மணி முதல் 13-07-09 காலை 06.10 மணி வரை.

சிம்ம ராசி: (மகம் 1,2,3,4 பாதங்கள், பூரம் 1,2,3,4 பாதங்கள், உத்திரம் 1-ம் பாதம்)
(பெயரின் முதல் எழுத்து ம-மி-மு-மே-மோ-டா-டி-டு-டே உடையவர்களுக்கும்)

தலைமை தாங்கும் இயல்பு கொண்ட சிம்ம ராசி நேயர்களே!

உங்கள் உழைப்பிற் குரிய புகழ், பெயர், வருமானம் ஆகிய மூன்றையும் 6-ம் இட ராகு வழங்குவார். 7-ல் குரு. கணினித் துறையில் உள்ளவர்கள் தங்கள் திறமையின் அடிப் படையில் புதிய சலுகைகளைப் பெறுவார்கள். சனி ராசியில் அமர்ந்திருக்கிறார். மனைகள் வாங்குதல், விற்றல் ஆகியவற்றின் மூலம் கிட்டும் லாபத்தின் அளவு குறை வாக இருக்கும். எனவே அவசரப்பட வேண்டாம். ஆனி 19க்குப்பிறகு 10-ம் வீட்டுக்கு மாறும் செவ்வாய் தொழில் சார்ந்த திட்டங்களின் செயல்பாட்டுக்கு உதவுவார்.சுக்ரன் 9,10 வீடுகளில் சஞ்சரிக்கிறார். கலைஞர்கள் பணிவாக நடந்து கொண்டால், நல்ல பெயர் நிலைக்கும். 11-ல் இருக்கும் சூரியன் முக்கியமான பொறுப்புக்களைக் கையாள்பவர்களை உயர் பதவியில் அமர்த்திடுவார்.ஆனி 30 வரை 10, 11 வீடுகளில் இருக்கும் புதனால்,மாணவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய நண்பர்கள் முன் வருவார்கள். பிறகு புதன் 12-ம் இடம் போவதால், காலத்தின் மதிப்பு ணர்ந்து செயல் படுதல் நலம். கேது 12-ல். அதிக உழைப்பும், களைப்பும் பாதிக்காமலிருக்க பெண்கள் குடும்பத்தாருக்கு ஊட்டச் சத்து மிகுந்த உணவு வகைகளை அளிப்பது அவசியம். இந்த மாதம் சிம்ம ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சந்திராஷ்டம நாட்கள்: 13-07-09 காலை 06.10 மணி முதல் 15-07-09 மதியம் 1.32 மணி வரை.

கன்னி ராசி: (உத்திரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம் 1,2,3,4 பாதங்கள், சித்திரை 1,2 பாதங்கள்)
(பெயரின் முதல் எழுத்து டோ-பா-பி- பூ-ஷ-ண-டா-பே-போ உடைய வர்களுக்கும்)

புத்திக் கூர்மையால் வெற்றி பெறும் கன்னி ராசி நேயர்களே!

இந்த மாதம் 11-ல் உள்ள கேது நீங்கள் இது வரை சந்தித்த இடையூறுகளைக் களை ந்து ,செயலாற்றும் துணிவைத் தந்திடுவார். 10-ல் இருக்கும் சூரியன் பொலிவான ஆரோக்கியத்தை அளிப்பதால்,புதுத்தெம்புடன் திகழ்வீர்கள்.ஆனி 16 முதல். 10,11 வீடுகளில் இருக்கும் புதன் மாணவர்களின் திறமைக்கேற்ற பரிசு, பாராட்டு ஆகிய இரண்டையும் வாரி வழங்குவார். 8,9 வீடுகளை சுக்ரன் சொந்தம் கொண்டாடுவது போல் உறவுகளும் நெருங்கி வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். செவ்வாய் 8,9 வீடுகளில் சுக்ரனோடு பயணம் செய்வதால், பயணங்களில் சாதாரணமாய் சொல்லும் வார்த்தைகள் சண்டையாய் மாற வாய்ப்பிருப்பதால், அறிமுகம் இல்லாதவரிடம் அள வாகப் பழகுவது அவசியம். 6-ல் குரு. வியாபாரிகள் எதிலும், நிதானம் மற்றும் தீர்க் காலோசனைனயைப் பின்பற்றினால், நஷ்டத்தைத் தவிர்த்து லாபம் பெறலாம். ராகு 5-ல். பங்குதாரர் களிடையே நிலவும் கருத்து மோதல் மேலும் பெரிதாய் மாற இடம் கொடுக்காமல் செயல்படவும். 12- ல் சனி. பொது வாழ்வில் இருப்பவர்கள் சின்ன விஷயங்களுக்கு சுள்ளென்று கோபப்படுவதைத் தவிர்த்தல் நல்லது. இந்த மாதம் கன்னி ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சந்திராஷ்டம நாட்கள்: 18-06-09 காலை 09.47 மணி முதல் 20-06-09 மதியம் 12.47 மணி வரை.

துலா ராசி: (சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி 1,2,3,4 பாதங்கள், விசாகம் 1,2,3 பாதங்கள்)
பெயரின் முதல் எழுத்து ர-ரி-ரு-ரே-ரோ-த-தி-து-தே உடையவர்களுக்கும்)

கலைக்கு முதலிடம் கொடுக்கும் துலா ராசி நேயர்களே!

இந்த மாதம் சனி 11-ல். பல விதத்திலும் சந்தோஷம் வந்து சேரும். உங்கள் திறமை யே மீண்டும் உங்களை புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும். 5-ல் உள்ள குருவால் பூர்வீகச் சொத்தில் இருந்த பிணக்குகள் தீரும். ராகு 4-ம் வீட்டைத் தன் வசம் வைத்தி ருப்பதால் நெருங்கிய நண்பர்களாயினும், சொல் சிக்கனத்தைக் கடைப் பிடிப்பது நல்ல து. பிரச்னைகள் புதிதாய்த் தோன்றாது. செவ்வாய், சுக்ரன் இருவரும் 7,8 வீடுகளில் நிற்கிறார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் எதிலும் கவனமாக இருந்தால், வருகின்ற லாபம் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். சூரியன் 9-ல். தந்தை வழி உறவுகளுடன் மோதல், அதிருப்தி என்ற நிலை இருந்தாலும்,பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். 10-ல் கேது. கலைஞர்கள் செய்யும் வேலையில் கண்ணும் கருத்தாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும். ஆனி 15 வரை அஷ்டமத்தில் உள்ள புதன் மாணவர் களின் திறமையைப் பெருக்கி, சுறுசுறுப்பாய் சுழலச் செய்வார்.. 16 முதல் ஆனி 30 வரை 9-ல் புதன். காசோலைகளின் பயன்பாடு, வங்கிக் கணக்கு ஆகியவற்றில் கவனமாக இருங்கள். பிறகு புதன் 10-ம் வீடு போகிறார். புது உறவுகளால் மகிழ்ச்சி பெருகும். இந்த மாதம் துலாம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சந்திராஷ்டம நாட்கள்: 20-06-09 மதியம் 12.47 மணி முதல் 22-06-09 மதியம் 1.47 மணி வரை.

விருச்சிக ராசி: (விசாகம் 4-ம் பாதம், அனுஷம் 1,2,3,4 பாதங்கள், கேட்டை 1,2,3,4 பாதங்கள்)
பெயரின் முதல் எழுத்து தோ, ந, நி, நு,நே, நோ,ய, இ, யு உடையவர்களுக்கும்

விடாமுயற்சிக்கு இலக்கணமாகத் திகழும் விருச்சிக ராசி நேயர்களே!

3-ல் உள்ள ராகு உங்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் நெம்பு கோலாய்த் திகழ்வார். 4-ல் குரு. பணிபுரியும் இடத்தில் நிம்மதி என்பது உங்கள் அணுகு முறையைப் பொறுத் தே அமையும். 6,7 வீடுகளை சுக்ரன், செவ்வாய் இருவரும் கடந்து செல்வதால், வியா பாரிகள் விடாமல் முயற்சி செய்தால், பழைய புகழும், சிறப்பும் தானே வந்து விடும். சூரியன் 8-ல். உயர் பதவியில் உள்ளவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளை வெளிப்ப டையாக பேசாமலிருந்தால், பிரச்னைகள் மேலும் பெரிதாகாமலிருக்கும். 9-ல். கேது. வெளியிடங்களில் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளல் அவசியம். சனி 10-ல். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை சுருக்கிக் கொண்டால், பற்றாக் குறை என்பது தலை காட்டாது. ஆனி 15 வரை புதன் 7-ல். ஏட்டிக்குக்குப் போட்டியாய் வேலை செய்பவரிடம் புதிய பொறுப்புக்களைத் தராமலிருப்பதே புத்திசலித் தனமாகும். 8-ல் ஆனி 30 வரை புதன் தங்குகிறார். வருமானத்திற்கு ஏற்ப வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். பிறகு புதன் 9- ல். நண்பர்களிடம் கவனமாகப்பழகுவதன் மூலம் வர இருக்கும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். இந்த மாதம் விருச்சிக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சந்திராஷ்டம நாட்கள்: 22-06-09 மதியம் 1.47 மணி முதல் 24-06-09 மாலை 04.06 மணி வரை.

தனுசு ராசி: (மூலம் 1,2,3,4 பாதங்கள், பூராடம் 1,2,3,4 பாதங்கள் , உத்திராடம் 1-ம் பாதம்)
(பெயரின் முதல் எழுத்து யே,யோ,ப,பி,பூ,த,ப,ட,பே உடைவர்களுக்கும்)

தெய்வ நம்பிக்கை உடைய தனுசு ராசி நேயர்களே!

2-ல் ராகு . படபடவென்று வார்த் தைகளை கொட்டுவதை நிறுத்திக் கொண்டால் எந்த சூழலிலும் இனிமை தங்கி இருக் கும். 3-ம் வீட்டில் குரு உள்ளார். தரகு மற்றும் கமிஷன் துறையில் உள்ளவர்கள் சில நெருக்கடிகளைத் தாண்டி , எடுத்துக் கொண்ட காரியங்களை முடிக்க வேண்யிருக்கும். 8-ல் கேது. காலம் தவறாமையைக் கடைபிடி த்தால் மாணவர்களுக்கு எதிலும் வெற்றிதான்! 5,6 வீடுகளில் செவ்வாய், சுக்ரன் இருவரும் நிற்கின்றனர். நோய் நிவர்த்தி, கடன் நிவாரணம் ஆகியவற்றிற்காக எடுக்கும் முயற்சி திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் மேல் படிப்பு, வேலை ஆகியவை உங்களை அலைய வைத்தாலும், விரும்பிய கல்லூரியில் சேர்ந்து விடுவர். இவர்களுடன் புதனும் ஆனி 15 வரை 6-ல் தங்குவதால், நீங்கள் விரும்பிய வாகனம் வாங்குதல், ஆபரணச் சேர்க்கை இவற்றிற்கான வாய்ப்பு கூடி வரும். பிறகு புதன் 7-ம் வீட்டில் சூரியனோடு இணைகிறார். ஒப்பந்தங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை நன்கு படித்தபின் கையெழுத்திடுவது நல்லது.சளி, இருமல் தொந்தரவுகள் வந்து போகும். சனி 9-ல் இருப்பதால் உங்கள் அவசர முடிவுகளால் காரியங்களின் வேகம் குறையலாம். எனவே எதிலும் நிதானமாக இருங்கள். இந்த மாதம் தனுசு ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சந்திராஷ்டம நாட்கள்: 24-06-09 மாலை 04.06 மணி முதல் 26-06-09 மாலை 06.30 மணி வரை.

மகர ராசி: (உத்திராடம் 2,3,4 பாதங்கள். திருவோணம் 1,2,3,4 பாதங்கள், அவிட்டம் 1,2 பாதங்கள்)
(பெயரின் முதல் எழுத்து போ, ஜ, ஜி,கி,கு,கே,கோ,க,கீ.உடையவர்க ளுக்கும்)

கடமை, கண்ணியம்,மற்றும் கட்டுப்பாடுக்கு முதலிடம் கொடுக்கும் மகர ராசி நேயர்களே!

குரு 2-ல். இது வரை இருந்த பொருளாதாரத் தொல்லைகள் குறையும். 6-ம் வீட்டு சூரியன் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார்.ராகு 1-ல், வியாபாரிகள் சின்ன விஷயங் களிலும் நேரடியான கவனம் செலுத்தி வந்தால், பொருள் நஷ்டம் இராது. சுக்ரன் 4,5 வீடுகளில். நுண்கலைகளில் ஆர்வமாய் இருப்பவர்களுக்கு,தங்கள் திறமையை வெளிப் படுத்தும் வாய்ப்பு கிட்டும். கேது 7-ல் அமர்ந்துள்ளார்.அனுசரித்து நடந்துகொள்ளும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 8- ல் சனி. வெளி நாடு செல்ல விரும்புபவர்கள் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களை அணுகினால் பலன் கிட்டும். செவ்வாயும் இந்த மாதம் 4,5 வீடுகளில் இருக்கிறார். உயர் பணியில் இருப்பவர்கள், தெரிந்தவர்களுக்கு மட்டும் சில சலுகைகளை அளிப்பது , விதிமுறைகளைத் தளர்த்து வது போன்றவற்றிற்குத் துணை போக வேண்டாம். ஆனி 14 வரை புதன் 5-ல் உள்ளார். மாணவர்கள் உல்லாசம், கேளிக்கை ஆகியவற்றில் ஈடுபடாமல் இருக்கவும். ஆனி 15 முதல் புதன் 6-ம் வீடு போகிறார். எலியும், பூனையுமாய் இருந்த நண்பர்கள் மனம் மாறி, உங்களுடன் உறவாட வருவார்கள்.ஆனி 31 முதல் புதன் 7-ல் அமர்வதால், பெண்கள் அக்கம் பக்கத்தாருடன் அளவாகப் பழகுவது நல்லது. இந்த மாதம் மகர ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சந்திராஷ்டம நாட்கள்: 26-06-09 மாலை 06.30 மணி முதல் 28-06-09 இரவு 10.05 மணி வரை.

கும்ப ராசி: (அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 1,2,3,4 பாதங்கள். பூரட்டாதி 1,2,3 பாதங்கள்)
(பெயரின் முதல் எழுத்து கு-கூ-கோ-ஸ-ஸீ-ஸு-ஸே-ஸோ-தா உடையவர்க ளுக்கும்)

துன்பத்தை எதிர்த்து மனம் தளராமல் போராடும் கும்ப ராசி நேயர்களே!

6-ல் உள்ள கேதுவால் கூட்டுத் தொழிலில் இருப்பவர்களின் வியாபாரம் மேலும் விரிவாகும். உங்கள் தன்னம்பிக்கையும், தைரியமும் கூடும். குரு 1-ல். மாணவர்கள் எந் தவொரு விஷயத்தையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் கவனத்துடன் இருப்பது அவசியம் ராகு 12-ல். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனமாய் இருந்தால், உபாதைகளும், மருத்துவ செலவுகளும் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். 3,4 இடங்களில் சுக்ரன் இருப்பதால், உறவினர்கள் உங்கள் கருத்துக்களுக்கு கூடுதல் மதிப்பும், மரியா தையும் தருவார்கள். புதன் 4,5,6 வீடுகளைக் கடந்து போகிறார். புதிதாக மணமான வர்கள் உறவுகளை புரிந்து கொண்டு நடந்து கொண்டால், அவர்களின் ஆதரவும் அனுகூலமும் குறையாமலிருக்கும். ஆனி 18 வரை 3-ல் செவ்வாய். வீடு மற்றும் மனை வாங்குதலில் நல்ல முன்னேற்றமிருக்கும். பிறகு 4-ம் வீடு போவதால், கட்டி, கொப்புளம் ஆகியவை தொலை தரலாம். பஞ்சமத்தில் சூரியன். உயர்பதவி வகிப் பவ ர்கள் நிர்வாக விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். 7-ம் வீட்டை சனி தன் பிடியில் வைத்திருப்பதால், கோபதாபங்களை குறைத்துக் கொண்டால், குடும்பத்தில் கூடுதல் மகிழ்ச்சி நிலவும். இந்த மாதம் கும்ப ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சந்திராஷ்டம நாட்கள்: 28-06-09 இரவு 10.05 மணி முதல் 30-06-09 அதிகாலை 03.36 மணி வரை.

மீன ராசி: (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி 1,2,3,4 பாதங்கள், ரேவதி 1,2,3 4 பாதங்கள்)
பெயரின் முதல் எழுத்து தி-து-ஞ-ச-த-தே-தோ-ச-சி உள்ளவர்களுக்கும்)

நண்பர்களை தன் சொத்தாகக் கருதும் மீன ராசி நேயர்களே!

6-ல் உள்ள சனியால் வழக்கு விவகாரங்களில் அனுகூலமான தீர்ப்பு உண்டாகும். 2,3 வீடுகளில் சுக்ரன் உள்ளதால், இனிமையாக பொழுது செல்லும். 11-ம் இட ராகுவால், பணி புரிபவர்கள் தங்கள் திறமைக்குரிய புகழ்ச்சியையும், வளர்ச்சியையும் அடைவார் கள். ஆனி 18 வரை செவ்வாய் 2-ல். வீடு,மனை விஷயங்கள் உங்களுக்கு சாதகமாய் முடிய, சமாதானமாய் போவது புத்திசாலித் தனமாகும் பிறகு செவ்வாய் 3-ல். பொது வாழ்வில் இருப்பவர்கள் முக்கியமான பதவியில் அமர்வார்கள். சகோதர வகை உறவில் இருந்த பிணக்குகள் தீரும். புதன் 3,4,5 வீடுகளில் நிற்கிறார். பங்குதாரர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீண் சண்டைகளைத் தவிர்த்தால், வெற்றிக்கான வாய்ப்பு கை நழு வாமல் உங்கள் வசம் இருக்கும். 4-ல் சூரியன். உங்களை அதிகமாக புகழ்பவர் களிடமிருந்து விலகியே இருங்கள். பஞ்சமத்தில் கேது இருப்பதால், பிள்ளைகளிடம் கண்டிப்புடன் கனிவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். படிப்பில் எந்தத் தொய்வும் ஏற்படாது. குரு 12-ல். வீண் செலவுகளைத்தவிர்த்து சிக்கனத்தைக் கடை பிடிக்க, வரவுக்குள் செலவு என்பதில் எந்த சிரமும் இராது. இந்த மாதம் மீன ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சந்திராஷ்டம நாட்கள்: 30-06-09 அதிகாலை 03.36 மணி முதல் 03-07-09காலை 11.20 மணி வரை.






Astrological predictions, Horoscope casting and matching for matrimony, NEWS and articles on Astrology

Designed and maintained by AKR Consultants